TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 29 , 2026 9 days 75 0
  • சர்வதேச வாகனத் தொழில்நுட்ப மையமானது (ICAT) 15 மீட்டர் பல அச்சு படுக்கை வசதி கொண்ட பேருந்துக்கான முதல் இணக்கச் சான்றிதழை வழங்கியுள்ளது.
  • லடாக்கின் கார்கிலில் உள்ள சுரு பள்ளத்தாக்கில் நடைபெறும் சுரு கோடைகாலத் திருவிழாவானது, அப்பகுதியின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் நிலையான சுற்றுலாவை மேம்படுத்துகிறது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (DRDO), லே மாவட்டத்தில் உள்ள உலகின் மிக உயரமான இறங்கு தளங்களில் ஒன்றான நியோமா-முத் இறங்கு தளத்தில் (Nyoma-Mudh Drop Zone) 22,000 அடி உயரத்தில் மற்றும் −15°C வெப்பநிலையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவ போர் பாராசூட் அமைப்பை (MCPS) வெற்றிகரமாக சோதித்தது.
  • சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனையில் உலகின் முதல் 'பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி' (Pinhole Pupilloplasty) மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
    • பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி/ஊசித்துளை கண்மணி சீரமைப்பு (PPP) என்பது டாக்டர் அமர் அகர்வால் உருவாக்கிய நுண்சிகிச்சை தொழில்நுட்பமாகும்; இது கருவிழித் தழும்புகள், ஒழுங்கற்ற கருவிழிகள் உள்ளிட்ட பார்வைப் பிரச்சினைகள் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளின் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
  • நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான குளோர்பெனிரமைன் மாலேட் மற்றும் பினைலெப்ரின் ஹைட்ரோகுளோரைடு கொண்ட நிலையான அளவு கலவை (FDC) மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை அரசு கட்டுப்படுத்தி உள்ளது.
    • இந்தக் கலவைகள் சிறு குழந்தைகளுக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதோடு, இதற்கு பாதுகாப்பான மாற்று மருந்துகள் உள்ளன என்றும் அரசு தெரிவித்துள்ளது.
  • நீர் ஒத்துழைப்பு, அமைதி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 முதல் 27 வரை உலக நீர் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Water for People & Progress என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்