TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 30 , 2026 8 days 72 0
  • இந்தியா மற்றும் வியட்நாம் கடலோரக் காவல்படைகள் சென்னை கடற்கரையில் 'SAHYOG HOP-TAC' எனும் கூட்டு கடல்சார் பயிற்சியின் இரண்டாவது பதிப்பை நிறைவு செய்தன.
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அன்று ஒன்டாரியோ ஏரியை அமெரிக்க புவியியல் பெயரிடும் சேவைக்காக "அமெரிக்க ஏரி" என பெயர் மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
    • ஒன்டாரியோ ஏரியானது அமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றாகும், மேலும் இது அமெரிக்கா மற்றும் கனடாவால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
  • நார்வே மன்னர் ஹெரால்ட் V தனது 89 ஆவது வயதில் காலமானார்; அவர் 1991 ஆம் ஆண்டில் மன்னரானார் மற்றும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் சடங்கு ரீதியான தலைவராகப் பணியாற்றினார்.
    • தனது தந்தை ஐந்தாம் ஹரால்டின் மரணத்திற்குப் பிறகு, எட்டாம் ஹாக்கான் மன்னர் நார்வேயின் அரியணையை மரபுரிமையாகப் பெற்றார்.
  • உற்பத்தி செய்யும் பகுதிகளில் இருந்து முக்கிய நுகர்வு மையங்களுக்கு இருப்பு வைக்கப் பட்ட வெங்காயத்தைக் கொண்டு செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து 450 டன்களுக்கும் அதிகமான வெங்காயத்தை ஏற்றிச் சென்ற முதல் காண்டா எக்ஸ்பிரஸ் டெல்லியை அடைந்தது.
  • காணாமல் ஆக்கப்படுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாதிக்கப் பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கான சர்வதேச விழிப்புணர்வு தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டு இந்த மாநாட்டின் 20 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இதன் முழக்கம் “Victims first. Actions now” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்