TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 28 , 2026 3 days 69 0
  • 'சமுத்திர மாந்தன்' (Samudra Manthan) முயற்சியின் கீழ் ஒடிசா கடற்கரையில் உள்ள மகாநதி கடல் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) இயற்கை எரிவாயுவை கண்டறிந்துள்ளதுடன் இது இந்தப் படுகையில் மேற்கொள்ளப் பட்ட முதல் ஆய்வுக் கிணறு ஆகும்.
  • ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு ஜெய மீனா முன்னேறியதன் மூலம், மென் டென்னிஸ் (soft tennis) போட்டியில் இந்தியா தனது முதல் ஆசிய விளையாட்டுப் பதக்கத்தை வென்றுள்ளது.
  • ஜப்பானின் நகோயாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மற்றும் வீரர் விஷால் டி.கே. ஆகியோருக்கு தலா ₹50 லட்சம் ரொக்கப் பரிசினை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
  • ஜப்பானின் நகோயாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் தனது நான்காவது கிளவுட் பிராந்தியமான 'இந்திய தென் மத்திய தரவு மையத்தை' தெலுங்கானாவில் திறந்துள்ளது.
  • ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT), வளாகத்திலேயே அமைந்த பிரத்தியேக வானியல் நோக்குக்கூடத்தைக் (observatory) கொண்ட இந்தியாவின் முதல் NIT ஆக மாறவுள்ளது.
  • ஜப்பானின் நகோயாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான தடியூன்றி தாண்டுதல் (pole vault) நிகழ்வில் இந்தியாவின் பரணிகா இளங்கோவன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • டெஸ்லா நிறுவனம் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் தனது ஆறாவது அனுபவ மையத்தை (Experience Centre) திறந்தது, இது மும்பை, குருகிராம், டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள அதன் தற்போதைய மையங்களுடன் இணைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்