தமிழ்நாட்டின் மாநில விலங்கானநீலகிரி வரையாட்டின் இரண்டாவது ஒத்திசைவு கணக்கெடுப்பு ஆனது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மொத்தப் பங்குகளைக் கடந்த முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திகழ்கிறது.
இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் ஆனது, இந்தியக் கடற்படைக்காக 22 ஒற்றை இருக்கைகள் மற்றும் நான்கு இரட்டை இருக்கைகளைக் கொண்ட 26 ரஃபேல்-M விமானங்களை வாங்குவதற்கான அரசுகளுக்கிடையேயான ஒரு ஒப்பந்தத்தில் (IGA) கையெழுத்திட்டுள்ளன.
உள்நாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர மன்றத்தின் (UNPFII) 24வது அமர்வு ஆனது நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் உள்ள நிர்வா என்ற சிவிங்கிப் புலிகள் ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது.
இதன் மூலம், மொத்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கையானது இந்த தேசியப் பூங்காவில் 29 ஆகவும், இந்தியாவில் 31 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) ஆனது, வளர்ந்து வரும் வர்த்தகப் பிரச்சினைகளில் வழி செலுத்துவதில் பங்குதாரர்களுக்கு உதவுவதற்காக பிரத்தியேக ‘உலகளாவிய சுங்கக் கட்டணம் மற்றும் வர்த்தக உதவி மையத்தினை’ தொடங்கி உள்ளது.
மேகாலயாவின் ரின்டியா பட்டு & காசி கைத்தறி நெசவு ஆகியவை மிகவும் அதிகாரப் பூர்வமாக புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன.
பாப் பாடகி கேட்டி பெர்ரி மற்றும் ஐந்து பெண்கள் ப்ளூ ஆரிஜின் ஏவுகலம் மூலமாக விண்வெளிக்குப் பயணித்து மிகவும் வெற்றிகரமாக புவிக்குத் திரும்பியுள்ளனர் என்ற நிலையில் இது கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலான காலக் கட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட முதல் அனைத்து மகளிர் பயணத்தைக் குறிக்கிறது.