TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 5 , 2025 16 hrs 0 min 20 0
  • குஜராத்தின் கட்ச் பகுதியில் முகேஷ் அம்பானி ஒரு பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தினை அறிவித்துள்ளார் என்ற நிலையில் இது தினசரி 55 மெகாவாட் சூரிய மின்சக்தி தொகுதிகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தில் (IATA) இணைந்த நான்காவது இந்திய விமான நிறுவனமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மாறியுள்ளது.
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது, உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கைபேசிச் சாதனங்களுக்கான இந்தியாவின் முதல் டெம்பர்டு (செம்பதக் கண்ணாடி)  கண்ணாடி உற்பத்தி மையத்தினைத் திறந்து வைத்தது.
  • இந்திய ராணுவமானது மோசமான இமயமலை சூழ்நிலைகளில் அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான போருக்குத் தயாராக இருப்பதைச் செயல் விளக்கிக் காட்டுவதற்காக அருணாச்சலப் பிரதேசத்தின் உயரமான காமெங் பகுதியில் யுத் கௌஷல் 3.0 பயிற்சியை நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்