M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF) உருவாக்கிய மீனவர்களுக்கு உகந்த கைபேசி செயலி, அபுதாபியில் நடைபெற்ற IUCN உலக வளங்காப்பு மாநாட்டில் Tech4Nature விருதை வென்றது.
குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுவான சித்தி என்ற சமூகத்தினர் 72 சதவீதத்திற்கும் மிக அதிகமான கல்வியறிவு விகிதத்தை அடைந்துள்ளனர்
இந்தியா புது டெல்லியில் ஐக்கிய நாடுகளின் படைப் பிரிவுகளுக்கான பங்களிப்பு நாடுகளின் (UNTCC) தலைவர்கள் மாநாட்டை நடத்துகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிகளில் புதிய மைல் கல்லை எட்டியதன் மூலம், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றார்.
வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஆனது மும்பையில் கோல்டன் ஸ்வீப் நடவடிக்கை என்ற தங்கக் கடத்தல் வழக்கில் 13 பேரைக் கைது செய்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஆஸ்திரேலியாவின் பெர்த் என்னுமிடத்தில் நான்காவது AUSTRAHIND 2025 பயிற்சியை நடத்துகின்றன.