ஊட்டி சட்டமன்ற உறுப்பினரான திரு. போஜராஜன், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சட்டமன்றப் பதிவுகளின்படி, அவருக்கு 79 வயதாவதுடன் அவர் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார்.
இந்தியக் கடலோரக் காவல்படை, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது முதல் காற்றழுத்த மிதவை ஊர்தியான (ACV) H-561-ஐ படையில் இணைத்துள்ளது; இது கோவாவில் உள்ள சௌகுலே & கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது.
வடக்கு சிக்கிமின் டிங்டா காப்புக்காட்டில் உள்ள பகுச்சென் பகுதியில் மிஷ்மி டாக்கின்கள் (புடோர்காஸ் டாக்சிகலர்) காணப்பட்டன என்பதோடு இது கிழக்கு இமய மலையில் காணப்படும் ஆடு-மான் வகையைச் சேர்ந்த ஒரு உயிரினமாகும் என்ற நிலையில் மேலும் இது போவிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் மிஷ்மி டாக்கின் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள லக்கன்பூரில், இந்தியாவின் முதல் வர்த்தக அளவிலான நிலக்கரியிலிருந்து அம்மோனியம் நைட்ரேட் தயாரிக்கும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இத்திட்டத்தை பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) மற்றும் கோல் இந்தியா லிமிடெட் (CIL) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான பாரத் கோல் கேசிஃபிகேஷன் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் (BCGCL) நிறுவனத்தால் உருவாக்கப் பட்டு வருகிறது.
இந்தியாவில் வாசிப்பு மற்றும் எழுத்தறிவுக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று தேசிய வாசிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் நூலகம் மற்றும் எழுத்தறிவு இயக்கத்தின் முன்னோடியாகக் கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த இந்திய நூலகர் மற்றும் சமூக சீர்திருத்த வாதியான புதுவயில் நாராயண பணிக்கர் (P.N. பணிக்கர்) அவர்களின் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மோதல்களில் பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று அனுசரிக்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு Conflict-Related Sexual Violence Against Children: Safeguarding Futures and Empowering Caregivers என்பதாகும்.
இசையை ஊக்குவிக்கவும், தொழில்முறை மற்றும் பயில்முறை இசைக் கலைஞர்களின் இலவச பொது நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது மேலும் இது Fête de la Musique (இசை விழா) அல்லது Make Music Day என்றும் அழைக்கப்படுகிறது.