TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 5 , 2026 2 days 60 0
  • தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் (IPRC), அரை-குளிர்நிலை இயந்திரத்தின் ஆற்றல் பகுதி சோதனை மாதிரிகளின் (PHTA) 175 டன் வெப்பச் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியது.
  • தனது 90வது ஆண்டு விழா மற்றும் இந்தியாவில் வானொலி ஒலிபரப்பின் வரவிருக்கும் 100 ஆண்டுகளை (2027) குறிக்கும் வகையில், 'ஸ்வர் பிரேர்ணா வீதிகா' (Swar Prerna Veethika) என்ற நிரந்தர புகைப்படக் கண்காட்சியை ஆகாஷ்வாணி திறந்துள்ளது.
    • 1936 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பொது சேவை ஒளிபரப்பாளராக செயல் பட்டு வருகின்ற ஆகாஷ்வாணி செவ்வியல், நாட்டுப்புற, பக்தி மற்றும் பிராந்திய இசைக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.
  • கோவாவில் உள்ள கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் (GSL), புதிய தலைமுறை விரைவு ரோந்துக் கப்பலான (FPV) ICGS அக்சய், இந்திய கடலோரக் காவல்படையில் (பாரதிய தத்ரக்சக்) இணைக்கப்பட்டது.
  • மகாராஷ்டிராவில் இந்தியாவின் முதல் கடல்சார் விமான நிலையத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    • மும்பை பெருநகரப் பகுதிக்கான (MMR) மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக செயல்படும் இந்த விமான நிலையம் பால்கர் மாவட்டத்தில் உள்ள கோர் கடற்கரைக்கு அருகே திட்டமிடப்பட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சீஷெல்ஸில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (UPI) அறிமுகப்படுத்துவதற்காக இந்தியாவும் சீஷெல்ஸும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.
  • குடிநீர் வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்காக ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்கள் யமுனை நதிநீர் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
    • மேல் யமுனைப் படுகையின் பயன்படுத்தக்கூடிய மேற்பரப்பு நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்த 1994 ஆம் ஆண்டின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் அமைந்துள்ளது.
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளைக் குறைப்பது மற்றும் துணி, சணல், காகிதப் பைகள் போன்ற மீண்டும் பயன்படுத்தக் கூடிய மாற்றுப் பொருட்களை ஊக்குவிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3 அன்று சர்வதேச நெகிழிப் பை இல்லாத தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Breaking Free from Single-Use Plastics: Towards a Sustainable Future என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்