TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 7 , 2026 7 hrs 0 min 13 0
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டுக் குடிமக்கள் (OCI) விண்ணப்பச் செயல்முறையை முழுமையாக இணையவழியில் பூர்த்தி செய்யும் வகையில், மின்னணு இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டுக் குடிமக்கள் (e-OCI) தளத்தை மத்திய உள்விவகார அமைச்சகம் (MHA) அறிமுகப்படுத்தியுள்ளது.
    • e-OCI அட்டை என்பது 2005 ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டுக் குடிமக்கள் (OCI) அட்டையின் டிஜிட்டல் வடிவமாகும்.
  • 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • அமெரிக்க-இந்திய உத்திசார் கூட்டாண்மை மன்றம் (USISPF) ஆனது, இந்திய வணிகத் தலைவர் சுனில் பார்தி மிட்டலுக்கு தனது 2026 ஆம் ஆண்டிற்கான தலைமைத்துவ விருதை வழங்கியது.
  • இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்ட இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) ஆனது, யூரோபேங்க் மூலம் கிரேக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • அமெரிக்க ஐக்கிய நாடுகள் (U.S.), நாடு தழுவிய சுதந்திரம் 250 (Freedom 250) பிரச்சாரத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று தனது 250-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது.
    • 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று பிலடெல்பியாவில் உள்ள 13 அமெரிக்க காலனிகளின் பிரதிநிதிகளால் சுதந்திரப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்து 250 ஆண்டுகள் நிறைவடைவதை இந்த ஆண்டுவிழா குறிக்கிறது.
  • இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு பாரம்பரியப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டுள்ளதன் மூலம் மாநிலத்தின் மொத்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
    • ஸ்பிதி சீபக்ஹார்ன் (சர்மம்), சலூனி சஃபேத் மக்கா (வெள்ளை மக்காச்சோளம்), சம்பா உலோகக் கலை, சிர்மௌரி லோயா, கின்னௌரி தொப்பி, மண்டி செபுவாடி, கின்னௌரி ஆப்பிள் மற்றும் கின்னௌரி நகைகள் ஆகியவை புதிதாக புவிசார் குறியீடு பெற்ற பொருட்களாகும்.
  • ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய மாநிலங்களுக்கு இடையேயான மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், கேரளாவின் ஆன்சி சோஜன் 6.88 மீட்டர் தாண்டி அஞ்சு பாபி ஜார்ஜின் 22 ஆண்டு கால இந்திய மகளிர் நீளம் தாண்டுதல் தேசிய சாதனையை முறியடித்தார்.
  • அஸ்ஸாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள சோட்டா திங்ராய் தேயிலைத் தோட்டமானது, வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்பட்ட இந்தியாவின் முதல் மாச்சா தேயிலையை உற்பத்தி செய்து கவுஹாத்தி தேயிலை ஏல மையத்தில் விற்பனை செய்துள்ளது.
    • மாச்சா என்பது குறைந்த சூரிய ஒளியின் கீழ் வளர்க்கப்படும் கேமல்லியா சினென்சிஸ் இலைகளிலிருந்து தயாரிக்கப் பட்டு நிழலில் வளர்க்கப்பட்டு நன்கு அரைக்கப்பட்ட பசுந் தேயிலைப் பொடியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்