TNPSC Thervupettagam

TNSDMA 2026 ஆய்வுக் கூட்டம்

June 7 , 2026 10 days 148 0
  • தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (TNSDMA) ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
  • 2026 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டில் இயல்பை விட குறைவான மழையே பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்து உள்ளது.
  • தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA) என்பது மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை, முன்னெச்சரிக்கை, தணிப்பு, மீட்புப் பணி, திட்டமிடல் மற்றும் சீரமைப்பு ஆகியவற்றிற்குப் பொறுப்பான முதன்மை அமைப்பாகும்.
  • இது முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் வருவாய்த் துறையின் கீழ் அரசாணை (G.O.) எண் 323-இன் மூலம், தலைமைச் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்டது.
  • 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டம், முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையங்களை உருவாக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியது.
  • அதன்படி, பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளைக் கண்காணிக்க, 2008 ஆம் ஆண்டில் அரசாணை (G.O.) எண் 564-இன் மூலம் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு தமிழ்நாடு அரசு TNSDMA-ஐ மறுசீரமைத்தது.
  • TNSDMA ஒரு தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) வழிகாட்டுதலின் அடிப்படையில் 'தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை' (TNDRF) ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்