11வது பங்குதாரர்கள் மாநாடானது (COSP11) கத்தாரின் தோஹாவில் நடைபெற்றது.
ஊழலைத் தடுக்கவும் அதனை எதிர்த்துப் போராடவும் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான உடன்படிக்கையின் (UNCAC) முன்னுரிமைகளைச் செயல்படுத்துவதற்கான பல தீர்மானங்கள் மற்றும் கொள்கை முடிவுகளைப் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டனர்.
சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான ஊழலைத் தடுப்பது குறித்த தீர்மானமும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அரசாங்கங்களும் பங்குதார அமைப்புகளும் இந்த முடிவுகளைச் செயல்படுத்துதல் மற்றும் அதன் பின்னான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.