ஃபைசர் இந்தியா நிறுவனம், இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசிக்கான அவசரகாலப் பயன்பாட்டு அங்கீகாரத்தை பெற வேண்டி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகத்தை அணுகிய முதல் மருந்தக நிறுவனமாகும்.
ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் பஹ்ரைன் ஆகியவை ஃபைசரின் தடுப்பூசியான BNT162b2 என்ற மருந்துக்கு அனுமதி அளித்துள்ளன.
இந்தத் தடுப்பூசியைச் சேமிக்க மிகக் குறைந்த வெப்பநிலையான மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் தேவைப் படுகிறது.
சீரம் இந்திய நிறுவனமானது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியான 'கோவிஷீல்ட்' என்ற மருந்துக்கு அவசரகாலப் பயன்பாட்டு அங்கீகாரத்தை நாடுகிறது.
சீரம் இந்திய நிறுவனம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும்.