April 9 , 2026
3 days
73
- வானியலாளர்கள் பூமியில் இருந்து சுமார் 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் இரண்டு புவி போன்ற கோள்களைக் கொண்ட ஒரு புதிய கிரக அமைப்பைக் கண்டுபிடித்து உள்ளனர்.
- இந்தக் கோள்கள் பூமியை விட பெரியவை ஆனால் நெப்டியூனை விட சிறிய பாறை கோள்கள் ஆக இருப்பதால் Super-Earths என்று அழைக்கப்படுகின்றன.
- இந்த மண்டலம் நமது சூரிய மண்டலத்தைப் போலல்லாமல், வாயுப் பெருங் கோள்களுக்கு அப்பால் ஒரு பாறை கிரகம் அமைந்துள்ளது போல் அசாதாரண அமைப்பைக் கொண்டுள்ளது.
- இந்தக் கண்டுபிடிப்பு கிரக உருவாக்கம் குறித்த தற்போதைய கோட்பாடுகளுக்கு சவால் விடுவதோடு, கிரகங்களின் வெவ்வேறு பரிணாம வளர்ச்சிகளைப் பரிந்துரை செய்கிறது.
- இந்தக் கோள்களைக் கண்டறிய அறிவியலாளர்கள் TESS (கடந்து செல்லும் புறக்கோள் ஆய்வு செயற்கைக்கோள்) மற்றும் CHEOPS போன்ற விண்வெளி கலன்களைப் பயன்படுத்தினர்.

Post Views:
73