TNPSC Thervupettagam

அச்சுறுத்தலுக்கு உள்ளான உலகளாவிய பனிமண்டலம்

November 7 , 2026 7 days 108 0
  • COP31 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக வெளியிடப்பட்ட இரண்டு அறிக்கைகள், புவி வெப்பமடைதலால் பனிப்பாறைகள், பனிப்படலங்கள் மற்றும் நிரந்தரப் பனிப்பகுதிகளுக்கு (Permafrost) மீள முடியாத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளன.
  • Overshoot and the Cryosphere: Averting Global Meltdown மற்றும் State of the Cryosphere 2026: The Cost of Overshoot ஆகிய அறிக்கைகளை சர்வதேச பனிமண்டல பருவநிலை முன்னெடுப்பு (ICCI) மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ஆகியவை வெளியிட்டன.
  • கடந்த பத்தாண்டுகளில் உலகளாவிய சராசரியை விட ஆர்டிக் பகுதி 4 மடங்கு வேகமாக வெப்பமடைந்துள்ளது; கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக் பனிப்படலங்கள் 1990 களில் பதிவானதை விடச் சுமார் 6 மடங்கு அதிக வேகத்தில் பனியை இழந்துள்ளன.
  • பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5°C வெப்பமயமாதல் வரம்பைத் தற்காலிகமாகத் தாண்டினால் கூட, அது மீள முடியாத பனி இழப்புக்கும் மற்றும் நிரந்தரப் பனிப்பகுதிகளில் இருந்து பெரிய அளவிலான கார்பன் வெளியேற்றத்திற்கும் வழிவகுக்கும்.
  • நிரந்தரப் பனிப்பகுதிகள் (Permafrost) வடக்கு அரைக்கோளத்தின் சுமார் 14 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியதுடன், குறைந்தது 1,700 பில்லியன் டன் கார்பனைத் தேக்கி வைத்துள்ளன.
  • 1835 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கு இடையில் பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தால் (GLOFs) இந்தியாவில் 6,119 மரணங்கள் பதிவாகியுள்ளன - இது எட்டு இந்து குஷ் இமயமலை நாடுகளில் அதிகபட்சமாகும்.
  • பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ள நிகழ்வுகளில் (62), சீனா (199) மற்றும் பாகிஸ்தானுக்கு (152) அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது; 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதன் அதிர்வெண் ஐந்து மடங்கு அதிகரித்து ஒரு தசாப்தத்திற்கு சுமார் 34 நிகழ்வுகளாக உயர்ந்துள்ளது.
  • பனிச்சரிவுகள் பதிவு செய்யப்பட்ட GLOF-களில் 50%-ஐயும், தீவிர மழைப்பொழிவு 25%-ஐயும் தூண்டியுள்ளன, மேலும் சுமார் 70% கோடைக்காலப் பருவமழையின் போது நிகழ்ந்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்