TNPSC Thervupettagam

அரசியலமைப்பு (131வது திருத்த) மசோதா, 2026

April 18 , 2026 5 days 194 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான அரசியலமைப்பு (131வது திருத்த) மசோதா, 251 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் 185 பேரின் எதிர்ப்புடன் வாக்கெடுப்புக்குப் பிறகு, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வாலால், தொகுதி மறுசீரமைப்பு மசோதா, 2026 மற்றும் ஒன்றியப் பிரதேசச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2026 ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட ஒரு தொகுப்பாக அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில் மற்ற இரு மசோதாக்களும் இந்தத் திருத்தத்தையே சார்ந்துள்ளன.
  • இம்மசோதா அரசியலமைப்பின் 81, 82, 170, 332 மற்றும் 334A ஆகிய சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழிகிறது.
  • இது மக்களவையின் பலத்தை அதிகபட்சமாக 850 உறுப்பினர்களாக உயர்த்த இலக்கு வைத்துள்ளது; இதில் மாநிலங்களில் இருந்து 815 வரையிலும் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து 35 வரையிலும் அடங்கும்.
  • முன்னதாக, சரத்து 81 ஆனது மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவையின் பலத்தை மாநிலங்களில் இருந்து 530 உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து 20 உறுப்பினர்கள் என வரம்பிற்குள் வைத்திருந்தது.
  • 1976 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த, மக்கள்தொகை அடிப்படையிலான இட மறுசீரமைப்பு மீதான நீண்டகாலத் தடையை இது நீக்குகிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு வரும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்குவதன் மூலம், தொகுதி மறு சீரமைப்பை உடனடியாக மேற்கொள்ள இது அனுமதிக்கிறது.
  • இட ஒதுக்கீட்டிற்கான மக்கள்தொகை, நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் ஒரு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது என இது கூறுகிறது.
  • தொகுதி மறுசீரமைப்புப் பொறுப்பை நாடாளுமன்றத்தின் முடிவிற்கு விடுவதற்குப் பதிலாக, மறுசீரமைப்பு ஆணையத்திடம் இது தெளிவாக வழங்குகிறது.
  • அரசியலமைப்பின் 170-வது சரத்தின் கீழ் மாநிலச் சட்டமன்றங்களில் புதிய இட மறு சீரமைப்பு மற்றும் தொகுதிகளை மறுவரையறை செய்ய இது வழி வகை செய்கிறது.
  • 2026 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பை ஒத்தி வைத்த சரத்து 170-இன் மூன்றாவது நிபந்தனையை இது நீக்குகிறது.
  • மாநிலங்களுக்குள் உள்ள தொகுதி எல்லைகள் புதுப்பிக்கப்பட்ட மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்படுவதை இது உறுதி செய்கிறது.
  • தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உடனடியாக மக்களவை மற்றும் மாநிலச் சட்ட மன்றங்களில் பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த இது உதவுகிறது.
  • 2023 ஆம் ஆண்டின் 106வது திருத்தச் சட்டத்தால் கொண்டுவரப்பட்ட தாமத நிபந்தனையை நீக்க, சரத்து 334A-ஐ இது திருத்துகிறது.
  • நாடாளுமன்றத்தால் நீட்டிக்கப்படா விட்டால், 106வது திருத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடரும் என்று இது கூறுகிறது.
  • எதிர்காலத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட தொகுதிகள் சுழற்சி முறையில் வருவதை இது உறுதி செய்கிறது.
  • மாநிலச் சட்டமன்றங்களில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க இது பாதுகாப்புகளை வழங்குகிறது.
  • குறிப்பாக அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினருக்கான இடங்கள் குறைக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்ய இது சரத்து 332-ஐ திருத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்