முதன்முறையாக, ஆரல் மற்றும் கொட்டியூர் வனவிலங்கு சரணாலயங்களில் பெடோமின் பூனை அரணை (ரிஸ்டெல்லா பெடோமி) இருப்பது பதிவு செய்யப் பட்டு உள்ளது.
இது பல தசாப்தங்களாக காணப்படாமல் இருந்த கொட்டியூர் டே மரப் பல்லி (சினெமாஸ்பிஸ் கொட்டியூரன்சிஸ்) இருப்பதையும் இந்தக் கணக்கெடுப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.
இது 2014 ஆம் ஆண்டில் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மிக அருகி இனமாகும்.
முன்னர் பதிவு செய்யப்படாத ஆறு ஓந்தி வகை பல்லிகள், நான்கு அரணைகள் மற்றும் ஐந்து மரப் பல்லி இனங்கள் சமீபத்தில் ஆவணப்படுத்தப்பட்டன.