TNPSC Thervupettagam

செம்மரங்கள் வளங்காப்பு

October 3 , 2025 13 hrs 0 min 24 0
  • தேசியப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையம் (NBA) ஆனது செம்மரங்கள் (தெரோகார்பஸ் சந்தலினஸ்) வளங்காப்பிற்காக ஆந்திரப் பிரதேச பல்லுயிர்ப் பெருக்க வாரியத்திற்கு 82 லட்சம் ரூபாய் நிதியை அனுமதித்துள்ளது.
  • இந்த நிதியானது 1 லட்சம் செம்மரக் கன்றுகளை வளர்க்கப் பயன்படுத்தப்படும் என்பதோடு இவை காடுகளுக்கு வெளியே உள்ள மரங்கள் (ToF) வளங்காப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
  • செம்மரங்கள் தென் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில், குறிப்பாக அனந்தபூர், சித்தூர், கடப்பா மற்றும் கர்னூலில் மட்டுமே காணப்படும் இனமாகும்.
  • இது CITES உடன்படிக்கையின் இரண்டாம் பின்னிணைப்பின் கீழ் மற்றும் 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்