அரியவகை நோய்களுக்கான தேசியக் கொள்கை
April 9 , 2021
1556 days
1264
- சமீபத்தில் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகமானது அரிய வகை நோய்களுக்கான தேசியக் கொள்கை 2021 என்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இக்கொள்கை,
- உள்நாட்டிலேயே ஆராய்ச்சி மேற்கொள்தல் மற்றும் மருந்துகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தவும்,
- அரியவகை நோய்களுக்கான மருத்துவச் செலவைக் குறைக்கவும்,
- அந்நோய்களை முன்கூட்டியே தடுக்க அவற்றை ஆரம்பக் கட்டத்திலேயே ஆய்வு செய்து கண்டறிதல் போன்றவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

- அந்நோய்களை ஆய்வு செய்ய உயிரித் தொழில்நுட்பத் துறை அமைத்த நிதான் கேந்திராக்கள் உதவும்
- சுமார் எட்டு சுகாதார நிறுவனங்கள் அரிய வகை நோயின் சிறப்புமிகு மையங்களாக நியமிக்கப்பட்டு உள்ளன.
- இந்த மையங்களுக்கு ஒரே முறையாக ரூ.5 கோடி நிதி வழங்கப்படும்.
- அரிய வகை நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ராஷ்டிரிய ஆரோக்ய நிதியின் கீழ், இந்திய அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
- இந்த நிதி உதவி 40% மக்களுக்கு வழங்கப்படும்.
- பொதுவாக வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்களுக்கு மட்டுமே ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
- இந்தியாவில் காணப்படும் அரிய வகை நோய்கள்,
- முதன்மை நோய் எதிர்ப்புக் குறைபாட்டு நோய்கள்,
- நீர்மத்திசு அழற்சி (சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்),
- பாம்ப்பே நோய்,
- கவுச்சர் நோய்,
- பேப்ரி நோய்,
- மேப்பிள் சிறுநீரக நோய் மற்றும் இதர பல ஆகியனவாகும்.
குறிப்பு
- ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாள் அரியவகை நோய் தினமாக அனுசரிக்கப் படுகிறது.
Post Views:
1264