சர்வதேச காணொலி தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் 2021
April 10 , 2021 1555 days 638 0
இந்தியத் தேர்தல் ஆணையம் சர்வதேச காணொலி தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தை நடத்தி இருக்கிறது.
இத்திட்டம் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது மேற்கொள்ளப்பட்டது.
இதன்கீழ், தேர்தல் முறைகள், வாக்குச் சாவடிகளைத் தயார் செய்தல், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்குச் செய்யப்படும் வசதிகள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை பிரதிநிதிகள் தெரிந்து கொள்ளும் வகையில் வாக்குச் சாவடிகளைக் காணொலி மூலம் பார்க்கும் வசதி செய்யப்பட்டது.
பெருந்தொற்றுக் காலத்தில் சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான, சிறப்பான மற்றும் பாதுகாப்பான தேர்தலை நடத்துவதே இதன் நோக்கமாகும்.
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காள தேசம், மற்றும் பூடான் உள்ளிட்ட 26 நாடுகள் மற்றும் 3 சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து சுமார் 106 பிரதிநிதிகள் இத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளனர்.