TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த சுகாதார (உடல்நல) தகவல் தளம்

April 10 , 2021 1555 days 890 0
  • சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்ர் டாக்டர் ஹர்ஷவர்தன் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தைத் தொடங்கி வைத்தார்.
  • சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, இத்தகைய மேம்பட்ட கண்காணிப்பு முறையை மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா ஆகும்.
  • இத்தளம் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும்.
  • ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டமானது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
  • இத்தளமானது நாட்டில் நோய் கண்காணிப்பினை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நோக்கமானது தொற்றுநோய்களுக்கான பரவலாக்கப்பட்ட மாநிலம் சார்ந்த ஒரு கண்காணிப்பு முறையை நிறுவுவதன் மூலம் அடையப்படும்.
  • இத்தளத்தின் முக்கிய அம்சங்கள் கைபேசிச் செயலிகள், சுகாதார வசதிகளுக்கான புவிசார் குறியிடுதல் போன்றவற்றின் மூலம் நிகழ்நேரத் தகவல்களை வழங்குதல் ஆகும்.
  • இத்தளமானது சிறப்பான மருத்துவ வசதியை நல்குவதோடு சுகாதாரம் (உடல்நலம்) தொடர்பான தரவுகளை இரகசியமாக மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இத்தளம் நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் நிலவும் நோய்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும்.
  • இத்தகவல்கள் ASHA பணியாளர்கள் மற்றும் ANM பணியாளர்கள் மூலமாக சேகரிக்கப் படும்.
  • ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்திற்கு உலக வங்கி உதவி வழங்குகிறது.
  • நோய்த்தொற்றினை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்