TNPSC Thervupettagam

அஸ்ஸாம் ரைபில்ஸ்

April 16 , 2019 2292 days 820 0
  • “வடகிழக்கு மாநிலங்களின் சென்டினல்கள்” என்று அழைக்கப்படும் அஸ்ஸாம் ரைபில்ஸானது இந்தியாவின் பழமையான துணை இராணுவப் படையாகும்.
  • இது பிரிட்டிஷாரால் 1835 ஆம் ஆண்டில் “கச்சா லெவி” என்று அழைக்கப்படும் ஒரு துணை இராணுவப் படையாக உருவாக்கப்பட்டது.
  • அஸ்ஸாம் ரைபில்ஸின் ஆங்கிலேயரல்லாத முதலாவது பொது இயக்குநர் கர்னல் சிதிமான் ராய் எம்சி என்ற படைத் தளபதி ஆவார்.
  • இந்திய அரசு (துறைகளை ஒதுக்குதல்) விதிகள், 1961 ஆனது அஸ்ஸாம் ரைபில்ஸை தலைமை “காவல் துறை”யாக வைத்துள்ளது. ஆனால் அஸ்ஸாம் ரைபில்ஸின் குறிக்கோள்கள் மற்றும் செயல்பாடுகள் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையைப் போன்றதாகும்.
  • அஸ்ஸாம் ரைபில்ஸின் நிர்வாகக் கட்டுப்பாடு உள்துறை அமைச்சகத்திடமும் செயல்முறைக் கட்டுப்பாடு பாதுகாப்பு அமைச்சகத்திடமும் உள்ளது.
  • இரட்டைக் கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அனைத்து இந்திய அஸ்ஸாம் ரைபில்ஸ் முன்னாள் சேவைப் பணியாளர் நல மன்றமானது தில்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்