இந்திய பார்மாகோவிஜிலென்ஸ் திட்டத்தின் (PvPI - Pharmacovigilance Programme of India) தேசிய ஒத்துழைப்பு மையமானது பொதுவாகப் பயன்படுத்தப்படும் 7 நுண்ணுயிர்க் கொல்லிகளிலிருந்து பதிவாகிக் கொண்டிருக்கும் எதிர்மறை விளைவுகள் குறித்து ஒரு எச்சரிக்கையை எழுப்பியுள்ளது.
அந்த 7 நுண்ணுயிர்க் கொல்லிகளாவன
Cefotaxime
Ofloxacin
Cefixime
Tranexamic Acid
Quetiapine
Sulfasalazine
Sodium Valproate
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பானது இந்த மருந்துகளின் எதிர்விளைவுகள் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க மருந்துப் பொட்டலங்களில் அல்லது விளம்பரத் தொகுப்புகளில் துண்டுப் பிரசுரங்களைச் செருக வேண்டும் என்று மருந்து உற்பத்தியாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
PvPI ஆனது மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் மருந்துக் கண்காணிப்பாளராகச் செயல்படுகின்றது.