தமிழ்நாட்டில் ஆகம விதிமுறைகளின் படி அமைக்கப்பட்ட கோயில்களையும் இதரக் கோயில்களையும் மூன்று மாதங்களில் அடையாளம் காணுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட குழுவிடம் உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.
ஆகமக் கோயில்கள் அடையாளம் காணப் பட்டவுடன், தற்போதைய நிலையே நிலவ வேண்டும் என்றும், அவற்றில் அர்ச்சகர்கள் (பூசாரிகள்) நியமனம் செய்யப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான நீதிபதி M. சொக்கலிங்கம் தலைமையில்லான ஒரு குழுவானது இந்த அடையாளம் காணல் நடவடிக்கையினை நடத்தும்.