TNPSC Thervupettagam

ஆக்கிரமிக்கப்பட்ட மத்திய அரசினால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள்

December 29 , 2022 944 days 522 0
  • இந்தியாவில் மத்திய அரசினால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அல்லது தளங்கள் மொத்தம் 3,695 உள்ளன.
  • இந்தியா முழுவதும் மொத்தம் மத்திய அரசினால் பாதுகாக்கப்பட்ட 356 நினைவுச் சின்னங்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
  • இது 2021 ஆம் ஆண்டில் பதிவான ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் 321 என்ற எண்ணிக்கையிலிருந்து மேலும் அதிகரித்துள்ளது.
  • மத்திய அரசினால் பாதுகாக்கப்பட்ட, நினைவுச் சின்னங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் (743) உள்ளன.
  • மத்திய அரசினால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அதிக எண்ணிக்கையில் (412) உள்ள இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • அதே நேரத்தில், சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நினைவுச் சின்னங்களும் உத்தரப் பிரதேசம் (75) மற்றும் தமிழ்நாடு (74) என்ற அளவில் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
  • அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் முறையே 48 மற்றும் 46 நினைவுச் சின்னங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.
  • மத்திய அரசினால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் என்பது, 1958 ஆம் ஆண்டு பண்டைய கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சியப் பகுதிகள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப் பட்டவையாகும்.
  • 2010 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், மத்திய அரசினால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் அமைந்துள்ள 100 மீட்டர் பரப்பிற்குள் கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குத் தடை செய்யப் பட்டுள்ளன.
  • இந்தப் பகுதிகளில் அமைந்துள்ள 300 மீட்டர் பரப்பிற்குள் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் கடுமையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்