ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ் சுகாதார மற்றும் நல மையம்
March 23 , 2020 1976 days 546 0
மத்திய அமைச்சரவையானது ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தின் கீழ் ஆயுஷ் சுகாதார மற்றும் நல மையத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மையங்கள் தேசிய அளவிலான சுகாதார நலனை அடைய உதவ இருக்கின்றன.
இந்த மையங்கள் மக்கள், தங்கள் கைகளிலிருந்து பணம் செலவிடப்படுவதை குறைக்க இருக்கின்றன.
இந்த மையங்கள் “சுய – சேவை” மாதிரியின் அடிப்படையில் செயல்பட இருக்கின்றன.
இது நிதி ஆயோக்கினால் பரிந்துரைக்கப்பட்டபடி, நீடித்த வளர்ச்சி இலக்கு 3 (ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்தல் மற்றும் அனைத்து வயதினருக்கான நலனை ஊக்குவித்தல்) என்ற இலக்குடன் ஒருங்கிணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது மத்திய சுகாதார குடும்பநலத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய சுகாதார ஆணையத்தினால் செயல்படுத்தப்படுகின்றது.