இராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு பாறை பாங்கான மற்றும் பகுதியளவு வறண்ட நிலப்பரப்பில் போர்துலாகா பாரத் என்ற புதிய பூக்கும் வகை தாவர இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இது IUCN வகைப்பாட்டின் கீழ் போதியத் தரவுகள் இல்லாத இனமாக வகைப் படுத்தப் படுள்ளது.
போர்துலாகா பாரத் என்பது போர்துலாகா இனத்தைச் சேர்ந்தது.
இந்தப் போர்துலாகா பேரினமானது நான்கு உள்ளூர் இனங்கள் உட்பட இந்தியாவில் 11 அறியப் பட்ட இனங்களுடன், உலகளவில் சுமார் 153 இனங்களைக் கொண்டுள்ளது.