சைப்ரஸ் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் சைப்ரஸ் குடியரசின் மிகவும் உயரிய குடிமை விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் ஆர்டர் ஆஃப் மகரியோஸ் III விருதினைப் பெற்றார்.
இது சைப்ரஸின் முதல் அதிபரான பேராயர் மகரியோஸ் III அவர்களின் பெயரால், அந்த நாட்டு அரசினால் வழங்கப்படும் விருதாகும்.
மத்தியத் தரைக் கடல் பகுதியைச் சேர்ந்த இந்த நாட்டிற்கு ஒரு இந்தியப் பிரதமர் மேற் கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
1962 ஆம் ஆண்டில் இந்த நாடுகளுக்கிடையே அரசு உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து இந்தியாவும் சைப்ரஸும் பாரம்பரியமாக வலுவான அரசு முறை உறவுகளைப் பேணி வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினரான சைப்ரஸ், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனத்தின் 'சுழற்சி முறையிலான தலைமைப் பொறுப்பை' ஏற்க உள்ளது.