மத்தியப் பிரதேசத்தில் பினா என்னுமிடத்தில் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்திய இரயில்வே துறைக்காக 1.7 மெகாவாட் திறனுள்ள சூரியசக்தி ஒளி மின்னழுத்த ஆலையைத் திறந்துள்ளது.
இந்திய இரயில்வேயின் இழுவை அமைப்புகளுக்கு (traction systems) தேவையான அளவு மின்சாரம் இந்த ஆலை மூலம் நேரடியாக வழங்கப்படும்.
இழுவை சக்தியை நேரடியாக வழங்குவதற்காக இந்திய இரயில்வே கட்டமைப்பில் தொடங்கப்பட்ட முதல் சூரியசக்தி மின் நிலையம் இதுவாகும்.