சர்வதேச வான்வழிப் போக்குவரத்துச் சங்கத்தின் புதிய தளம்
March 1 , 2022 1399 days 666 0
உலகளாவிய ஒரு வங்கிக் குழுமமான ஸ்டான்டர்டு சார்டர்டு, சர்வதேச வான்வழிப் போக்குவரத்துச் சங்கத்துடன் (International Air Transport Association – IATA) இணைந்து உள்ளது.
இது இந்தியாவின் விமானப் போக்குவரத்து தொழில்துறையில் ஒரு பணவழங்கீட்டுத் தளத்தினைத் தொடங்குவதற்கான ஒரு கூட்டிணைவாகும்.
IATA Pay என்ற தளத்தைப் பிரயோகிக்கும் விமான நிறுவனங்களுக்கு, UPI வருடி & பண வழங்கீடு மற்றும் UPI வரவு (பண வழங்கீட்டிற்கான கோரிக்கை) போன்ற உடனடிக் கட்டண வசதிகளை வழங்குவதற்கு இது உதவுகிறது.