மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவ்டேகர் அவர்கள் காணொலி வாயிலாக இந்தத் தளத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் தளமானது காலநிலை மாற்றப் பிரச்சினைகளைக் களைவதற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த முக்கியத் தகவல்களைக் கொண்டிருக்கும்.
2015 ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்தைச் சாதிக்கும் வகையில் செயல்படும் ஒரே ஜி20 நாடு இந்தியா ஆகும்.
2020 ஆம் ஆண்டில் இந்தியாவானது, தனது ஜிடிபியில் 2005 ஆம் ஆண்டு நிலையிலிருந்து 21% என்ற அளவிலான உமிழ்வுத் திறனைக் குறைக்கும் தனது தன்னார்வ இலக்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
மேலும் இந்தியாவானது இலக்கு ஆண்டான 2030 ஆம் ஆண்டிற்கு முன்பாகவே 35% என்ற அளவிலான உமிழ்வுக் குறைப்பு என்ற இலக்கை அடையும் வகையில் செயல்பட்டு வருகின்றது.
இந்தியாவின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட 3 பங்களிப்புகள் பின்வருமாறு:
2030 ஆம் ஆண்டில் ஜிடிபியின் உமிழ்வுத் தீவிரத்தை மூன்றில் 1 பங்காகக் குறைத்தல்.
புதை படிவமற்ற எரிபொருள் ஆதாரங்களிலிருந்துப் பெறப்படும் மின்சாரத்தின் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனாக 40% என்ற அளவினை அடைதல்.
கார்பன் டை ஆக்ஸைடின் 2.5 பில்லியன் முதல் 3 பில்லியன் டன்கள் வரையான கார்பன் சேமிப்புத் திறனுக்குச் சமமாக 2030 ஆம் ஆண்டில் மரங்கள் பரப்பிற்கான வனப் பரப்பை கூடுதலாக ஏற்படுத்துதல்.