திருநர்களுக்கான தேசியத் தளம்
December 2 , 2020
1696 days
654
- சமீபத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகமானது “திருநர்களுக்கான தேசியத் தளம்” என்ற ஒரு மின்னணு தளத்தைத் தொடங்கி உள்ளது.
- இந்தத் தளமானது அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களை ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு வேண்டி திருநர் சமூகத்திற்கு உதவ உள்ளது.
- இது திருநர்கள் (பாதுகாப்பு உரிமைகள்) சட்டம், 2019 என்பதின் ஒரு முக்கிய அம்சமாகும்.
- “கரிமா கிரெக் : திருநர்களுக்கான தங்கும் விடுதியானது” குஜராத்தின் வடோதராவில் தொடங்கி வைக்கப் பட்டது.
- இந்த அமைச்சகமானது திருநர்களுக்கு 13 தங்கும் விடுதிகள் மற்றும் அதன் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு வேண்டி 10 நகரங்களை அடையாளம் கண்டுள்ளது.
- வடோதரா, புதுதில்லி, பாட்னா, புவனேஸ்வர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மணிப்பூர், சென்னை, ராய்ப்பூர் மற்றும் மும்பை ஆகியவை இந்த 10 நகரங்களாகும்.
Post Views:
654