இந்தியா நானோ மாநாடு மற்றும் கண்காட்சியானது பெங்களூரில் நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் நானோ தொழில்நுட்பத் துறையில் கல்வியாளர்கள் மற்றும் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகள் ஆகியவை காண்பிக்கப் பட்டன.
இந்த மாநாடானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, கர்நாடக அரசு மற்றும் ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research - JNCASR) ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப் பட்டது.
JNCASR ஆனது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி பெற்ற ஒரு நிறுவனமாகும்.