வியட்நாமுக்கு பிரம்மோஸ் மீயொலி வேக எறிகணைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் அறிவித்தார்.
பிரம்மோஸ் என்பது இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய மீயொலி வேக எறிகணையாகும்.
சிங்கப்பூரில் நடைபெற்ற முக்கியப் பாதுகாப்பு மன்றமான 'ஷாங்ரி-லா மாநாட்டில்' இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தோனேசியாவுடன் இதே போன்ற பிரம்மோஸ் எறிகணை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தில் இந்தியாவும் உள்ளது.
இந்தியா ஏற்கனவே பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் எறிகணைகளை ஏற்றுமதி செய்துள்ளது என்ற நிலையில் இது பாதுகாப்பு ஏற்றுமதியில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.