இந்தியாவின் அடிப்படைச் சாலைப் புள்ளிவிவரங்கள் 2018-19
July 24 , 2022 1057 days 538 0
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது அதன் வருடாந்திர “இந்தியாவின் அடிப்படைச் சாலைப் புள்ளிவிவரங்களை (2018-19)” வெளியிட்டது.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் 63,31,757 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகள் உள்ளது.
இது உலகளவில் இரண்டாவது மிக அதிக தூர சாலை அமைப்பாகும்.
இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் சாலைப் போக்குவரத்து அதிக ஆதிக்கம் செலுத்துகிறது.
2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்தப் போக்குவரத்து துறைப் பங்களிப்பான 4.58% என்ற அளவுடன் ஒப்பிடுகையில் இதன் பங்களிப்பு மொத்த மதிப்புக் கூட்டலில் 3.06% என்ற அளவிலானப் பங்கினை வழங்கியுள்ளது.
இரயில்வே துறையின் பங்கானது 0.74% ஆக உள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறையின் பங்கு 0.125 ஆகவும், நீர்ப் போக்குவரத்துத் துறையின் பங்கு 0.08% ஆகவும் உள்ளது.
இந்தியாவின் மொத்த சாலைக் கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகளின் அளவு 2.09% ஆகும்.
13.4% நெடுஞ்சாலைக் கட்டமைப்புடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து 8.9% நெடுஞ்சாலைக் கட்டமைப்புடன் உத்தரப் பிரதேச மாநிலமும், 7.8% நெடுஞ்சாலைக் கட்டமைப்புடன் ராஜஸ்தான் மாநிலமும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்தியாவின் மொத்த சாலைக் கட்டமைப்பில் மாநில நெடுஞ்சாலைகளின் அளவு 2.8 சதவீதம் ஆகும்.
மகாராஷ்டிரா (17.83%) மிகப்பெரிய மாநில நெடுஞ்சாலைக் கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்தியாவில் உள்ள மொத்த மாநில நெடுஞ்சாலைக் கட்டமைப்பில் இந்த 5 மாநிலங்களும் 53.9% பங்கைக் கொண்டுள்ளன.