குடிமைப் பணித் தேர்வுகளின் பயிற்சி நிறுவனங்களுக்கான தேசிய தர நிலைகள்
July 24 , 2022 1247 days 827 0
மத்திய அரசானது, "குடிமைப் பணித் தேர்வுகளின் பயிற்சி நிறுவனங்களுக்கான தேசியத் தரநிலைகளை (NSCSTI)" வெளியிட்டது.
குடிமைப் பணித் தேர்வுகளின் பயிற்சி நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான தர நிலைகளை உருவாக்குவதற்கான தனித்துவமான ஒரு மாதிரியை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது.
இது குடிமைப் பணியில் சேரும் அதிகாரிகளின் தரம் மற்றும் திறனை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கர்மயோகி திட்டத்தின் ஒரு பகுதியாக திறன் மேம்பாட்டு ஆணையமானது உருவாக்கப்பட்டது.
கர்மயோகி திட்டம் என்பது "தேசியக் குடிமைப் பணிகள் திறன் மேம்பாட்டுத் திட்டம்" ஆகும்.