2025 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 4.496 பில்லியன் டாலர் அதிகரித்து 702.28 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
தங்க இருப்பின் மதிப்பு 6.181 பில்லியன் டாலர் அதிகரித்து 108.546 பில்லியன் டாலராக உயர்ந்ததே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும்.
அந்நியச் செலாவணி இருப்புகள் பண மதிப்பின் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்பட்டு 1.692 பில்லியன் டாலர் குறைந்து 570.411 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் IMF இருப்பு நிலை 4.602 பில்லியன் டாலராகவும் குறைந்துள்ள நிலையில், சிறப்பு எடுப்பு உரிமைகள் (SDR) சற்று உயர்ந்து 18.722 பில்லியன் டாலராகவும் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த நிதியாண்டில் 600 கிலோகிராம் தங்கத்தைச் சேர்த்து உள்ளதுடன் டாலர் அடிப்படையிலான சொத்துக்களை விட தங்கத்தைச் சாதகமாகக் கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அமெரிக்கக் கருவூல இருப்புக்கள் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு 219 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.