QS பாடத் தரவரிசை - 2020ன் படி, வேலூர் தொழில்நுட்ப நிறுவனமானது (Vellore Institute of Technology - VIT) பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடத்திற்காக இந்தியாவின் சிறந்த (முன்னணி) தனியார் கல்வி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
QS உலகப் பல்கலைக் கழகத் தரவரிசைகளில் இந்தப் பல்கலைக் கழகமானது உலகின் சிறந்த 450 பல்கலைக் கழகங்களிடையே சிறந்த பல்கலைக் கழகமாக இடம் பெற்றுள்ளது.
QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை என்பது ஐக்கிய ராஜ்ஜியத்தின் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (Quacquarelli Symonds - QS) நிறுவனத்தால் வெளியிடப்படும் பல்கலைக்கழக தரவரிசைகளின் ஒரு வருடாந்திர வெளியீடாகும்.
VIT ஆனது இந்திய அரசால் சிறப்புமிகு நிறுவனமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இது இந்திய அரசாங்கத்தின் புத்தாக்க சாதனைகள் தொடர்பான நிறுவனங்களின் அடல் தரவரிசை (Atal Ranking of Institutions on Innovation Achievements - ARIIA) புத்தாக்கத்திற்காக முதலிடத்தில் (VIT) தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.