துணைநிலை ஆளுநரின் அதிகாரம் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு
March 12 , 2020 1985 days 587 0
மதராஸ் உயர் நீதிமன்றமானது புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரான கிரண் பேடியை ஒன்றியப் பிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அன்றாட விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தனது சொந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.
மதராஸ் உயர் நீதிமன்றமானது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் ஒற்றுமையாகச் செயல்பட துணைநிலை ஆளுநரைக் கேட்டுக் கொண்டது.
மேலும் அது மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை அனுமதித்துள்ளது.