2026-27 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் முதல் நீலப் பத்திரத்தை சாகர்மாலா நிதிக் கழகம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் நீலப் பொருளாதாரத் திட்டங்களுக்காக ₹1,000 கோடியைத் திரட்டுவதை இந்தப் பத்திர வெளியீடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீலப் பத்திரங்கள் என்பவை பெருங்கடல் மற்றும் கடல் வளங்களின் நிலையான பயன்பாடு, பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் கடன் கருவிகளாகும்.
இந்த நிதியானது துறைமுகங்கள், கடலோர உள்கட்டமைப்பு, கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும்.
உலகின் முதல் இறையாண்மைசார் நீலப் பத்திரத்தை 2018 ஆம் ஆண்டில் சீஷெல்ஸ் நாடு வெளியிட்டது.