ஜேவரிலுள்ள நொய்டா விமான நிலையம் முதல் பிலிம் சிட்டி வரையில் பாட் டாக்சி (pod taxi) சேவையைத் தொடங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்தியன் போர்ட் இரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Port Rail and Ropeway Corporation Ltd) என்ற நிறுவனமானது தயாரித்துள்ளது.
இந்த இரு பகுதிகளுக்கிடையே வாகன ஓட்டுநர் இல்லாத டாக்சி சேவையை இயக்குவதற்கான திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
இது 14 கி.மீ. தூரத்திற்கான போக்குவரத்துச் சேவை ஆகும்.
இது இந்தியாவின் முதல் பாட் டாக்சி சேவையாக விளங்கும்.