யாக் எனப்படும் இமாலய மலை எருதுகளுக்குக் காப்பீடு பதிவு செய்வதற்காக அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்திலுள்ள தேசிய இமாலய மலை எருது ஆராய்ச்சி மையமானது தேசியக் காப்பீட்டு நிறுவனக் கழகத்துடன் கூட்டிணைவு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்தக் காப்பீட்டுக் கொள்கையானது வானிலையால் ஏற்படும் பேரிடர்கள், நோய்கள், போக்குவரத்தின் போது ஏற்படும் விபத்துகள், அறுவைச் சிகிச்சைகள் மற்றும் வேலை நிறுத்தம் (அ) கலவரங்கள் போன்றவற்றால் ஏற்படும் அபாயங்களிலிருந்து இமாலய மலை எருதினை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்குப் பாதுகாப்பினை வழங்கும்.
லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய ஒன்றியப் பிரதேசங்களில் இமாலய மலை எருதுகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.