2021 ஆம் ஆண்டில் 138 மில்லயனாக இருக்கும் இந்திய முதியோர் மக்கள் தொகையானது (60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்) 2031 ஆம் ஆண்டில் 194 மில்லியனாக உயரும் (41% உயர்வு) எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தேசியப் புள்ளிவிவர அலுவலகத்தின் 2021 ஆம் ஆண்டு இந்தியாவின் முதியோர் மக்கள்தொகை எனும் அறிக்கையில் இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, கேரள மாநிலம் அதிக முதியோர் மக்கள் தொகையினைக் கொண்டுள்ளது.
இதனையடுத்து தமிழ்நாடு மாநிலம் உள்ளது.
இதில் இமாச்சலப் பிரதேசம் மூன்றாமிடத்தில் உள்ளது.
இதில் பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகியவை குறைவான விகிதத்தைக் கொண்டுள்ளன.