2021 ஆம் ஆண்டு தீர்ப்பாயச் சீர்த்திருத்தங்கள் மசோதாவானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது.
பல்வேறு சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட 9 மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை ரத்து செய்வதற்காக இந்த மசோதாவானது இயற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பாயங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளும் உயர்நீதிமன்றம் (அ) வணிக நீதி மன்றத்திற்கு இடமாற்றப் படும்.
இந்த மசோதாவானது பல்வேறு தீர்ப்பாயங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரது பொறுப்பிற்காக வேண்டிய பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் வழங்குகிறது.