உலகின் முன்னணி தரவு, கண்ணோட்டம் மற்றும் ஆலோசனை வழங்கும் ஒரு நிறுவனமான கந்தார் எனும் நிறுவனமானது இந்தியாவில் டிஜிட்டல் தகவமைப்பு மற்றும் பயன்பாட்டுப் போக்குகள் குறித்த அறிக்கையான “ICUBE 2019” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் மாதாந்திர இணையப் பயன்பாட்டாளர்கள் அனைவரும் இணையத்தை அணுக கைபேசியை ஒரு சாதனமாகப் பயன்படுத்துகின்றனர்.
84%ற்கும் மேற்பட்ட பயனாளிகள் பொழுதுபோக்குப் பயன்பாடுகளுக்காக இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.