TNPSC Thervupettagam

இந்தியாவில் சாலை விபத்துகள்

December 6 , 2020 1698 days 625 0
  • ஒரு நாளைக்கு 156 சாலை விபத்துக்களுடன், தமிழ்நாடானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பகத்திடம் உள்ள தரவுகளின் படி இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டினை அடுத்து மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிக சாலை விபத்துகள் நிகழ்கின்ற மாநிலங்களாக உள்ளன.
  • தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் இறப்புகளைப் பொறுத்த அளவில், தமிழ்நாடு மாநிலமானது உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து 3வது இடத்தில் உள்ளது.
  • பெரிய நகரங்களின் கீழ், சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களில் சென்னை நகரானது தில்லி நகருக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது.
  • மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் விபத்துகள் அறிக்கை 2019 என்ற ஒரு அறிக்கையானது நாட்டின் மிகக்கொடிய சாலை விபத்துகளை ஏற்படுத்தும் அபாய இடங்களைக் கொண்ட நகரங்களில் சென்னை நகரத்தை 3வது இடத்தில் வைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்