TNPSC Thervupettagam

கர்நாடக மாநில சட்ட மேலவை உறுப்பினர் தகுதி நீக்கம்

December 6 , 2020 1698 days 652 0
  • கர்நாடக மாநில உயர் நீதிமன்றமானது விஸ்வநாத் என்பவர் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி  நீக்கம் செய்யப் பட்டுள்ளார், எனவே அம்மாநில அமைச்சரவையில் அவரை இணைத்துக் கொள்ள முடியாது என்று அறிவித்து உள்ளது.
  • விஸ்வநாத் அவர்கள் இந்திய அரசியலமைப்பின் சரத்து 164(1B) மற்றும் சரத்து 361(B) ஆகியவற்றின் கீழ் தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
  • விஸ்வநாத் கர்நாடக மாநிலச் சட்டமன்றத்திற்காக நடத்தப்பட்ட இடைத்  தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் அம்மாநில சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப் பட்டார்.
  • ஏற்கெனவே இவர் 2019 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
  • தகுதி நீக்கம் செய்யப் பட்ட ஒரு நபர் இடைத் தேர்தலில் அதே தொகுதியிலிருந்து வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே அவர் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்கத் தகுதியுடையவர் என்று கூறப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்