கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பால்வளத் துறையானது 70% விரிவடைந்துள்ளது.
பால் உற்பத்தியானது, 2014-15 ஆம் ஆண்டில் 146 மில்லியன் டன்னிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 239 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
2029 ஆம் ஆண்டிற்குள் 75,000க்கும் மேற்பட்ட பால் கூட்டுறவுகளை நிறுவ அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
மூன்று புதிய பல மாநிலக் கூட்டுறவு சங்கங்கள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன:
அவற்றுள் ஒன்று கால்நடை தீவன உற்பத்தி, நோய் கட்டுப்பாடு மற்றும் செயற்கை கருவூட்டல் ஆகியவற்றிற்காகவும்;
இரண்டாவது மாட்டு சாண மேலாண்மை மாதிரிகளை உருவாக்குவதற்காகவும்
மூன்றாவது இறந்த கால்நடை பாகங்களை சுழற்சி முறை வடிவில் பயன்படுத்துவதற்காகவும் ஆகும்.
ஹரியானாவில் புதிதாக திறக்கப்பட்ட சபர் பால் பண்ணையானது, தயிர், மோர் மற்றும் யோகர்ட் ஆகியவற்றிற்கான இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தி அலகு ஆகும்.
2028-29 ஆம் ஆண்டிற்குள் 100 மில்லியன் லிட்டரை எட்டும் இலக்குடன் இந்தியாவின் பால் பதப்படுத்தும் திறன் ஆனது தற்போது ஒரு நாளைக்கு 660 லட்சம் லிட்டராக உள்ளது.
தனி நபருக்கான பால் கிடைக்கும் தன்மை 124 கிராமிலிருந்து 471 கிராமாக அதிகரித்து உள்ளது.