TNPSC Thervupettagam

இந்தியாவில் முதலாவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சந்திப்பு – 2020

November 13 , 2019 2094 days 705 0
  • 2020 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation SCO) 19வது அரசாங்கத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தை இந்தியா நடத்த இருக்கின்றது.
  • 2017 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் இந்தியா முழு உறுப்பினராக அனுமதிக்கப்பட்ட பின்னர், புது தில்லியால் ஏற்பாடு செய்யப்பட இருக்கும் எட்டு உறுப்பு நாடுகள் கொண்ட இந்தக் குழுவின் இதுபோன்ற ஒரு முதலாவது உயர் மட்டக் கூட்டம் இதுவாகும்.
  • SCO என்பது சீனாவால் தலைமை தாங்கி ஆரம்பிக்கப்பட்ட எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஆகும். இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் முழு உறுப்பினர்களாக 2017 ஆம் ஆண்டில் அனுமதிக்கப் பட்டன.
  • சமீபத்தில் தாஷ்கண்டில் நடத்தப்பட்ட அதன் உச்சி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்