TNPSC Thervupettagam

இந்தியா–AI தாக்க உச்சி மாநாடு 2026

February 15 , 2026 2 days 35 0
  • செயற்கை நுண்ணறிவில் (AI) உலகளாவிய ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு, இந்திய அரசு இந்தியா–AI தாக்க உச்சி மாநாடு 2026 என்பதை நடத்தவுள்ளது.
  • புதுதில்லியில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, உலகளாவியத் தெற்கு நாடுகளில் நடைபெறும் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடாகும்.
  • இந்த உச்சி மாநாடு மக்கள், கிரகம் மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது.
  • இந்த மாநாட்டில் ஏழு சக்கரங்களை (கருத்துரு) சுற்றி விவாதங்கள் ஏற்பாடு செய்யப் படும், அவையாவன: மனித மூலதனம்; சமூக அதிகாரமளிப்புக்கான உள்ளடக்கம்; பாதுகாப்பான மற்றும் நம்பகமான AI; மீள்தன்மை, புத்தாக்கம் மற்றும் செயல்திறன்; அறிவியல்; AI வளங்களை ஜனநாயகப் படுத்தல்; பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நன்மைக்கான செயற்கை நுண்ணறிவு (AI).
  • இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய செயற்கை நுண்ணறிவு (AI) திட்டம், இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் மற்றும் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.
  • இந்த உச்சி மாநாடு என்பது பொறுப்பான AI ஏற்பை ஊக்குவித்தல், உலகளாவிய கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்