மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக நிஷிகாந்த் துபே ஒரு பொருண்மை தீர்மானத்தை (Substantive Motion) முன்மொழிந்தார்.
ஒரு பொருண்மை தீர்மானம் என்பது சபையின் தெளிவான மற்றும் பிணைக்கும் முடிவைப் பெறுவதற்காக மக்களவையில் வைக்கப்படும் ஒரு சுயாதீனமான மற்றும் முழுமையான தீர்மானமாகும்.
இது தன்னளவில் முழுமையானது மற்றும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் வேறு எந்த விவகாரங்களுடனும் இணைக்கப்படுவதில்லை.
இது ஏற்றுக் கொள்ளப்படும் போது, அந்தத் தீர்மானம் ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் அவையின் முறையான கருத்தை அல்லது விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது.
மக்களவையின் நடைமுறை விதிகளின் கீழ், சபாநாயகர் ஓம் பிர்லாவின் ஒப்புதலுடன் மட்டுமே இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதோடு அவருக்கு அதை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ உரிமை உண்டு.
இது ஏற்றுக் கொள்ளப்பட்டால், இந்த தீர்மானம் சபையில் விவாதிக்கப்பட்டு, கட்டாய வாக்கெடுப்புக்கு விடப்படும் என்பதோடுமேலும் சில சந்தர்ப்பங்களில் ஆய்வுக்காக சிறப்புக் குழுவிற்கு அது பரிந்துரைக்கப்படலாம்.
வழக்கமான அரசியல் தகராறுகளில் இவ்வகைத் தீர்மானங்கள் பொதுவாகப் பயன்படுத்தப் படுவதில்லை என்பதோடு மேலும் அவை எதிர்க்கட்சித் தலைவர் போன்ற அரசியலமைப்புப் பதவிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கருத்தில் கொள்ள ஒரு முறையான நாடாளுமன்றச் செயல்முறையை வழங்குகின்றன.